Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 73/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 73/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

    5. திருவரங்கத்து மாலை - 73/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 23/25 (திருவடி பெருமை)

    நெட்டரவின் பெரு மூச்சு எழ , வீசு நெருப்பில் வெந்து ,
    பட்ட கடம்பும் தழைத்தது , மீள ; பசுந் துளவின்
    மட்டு அவிழ் தொங்கல் அரங்கர் பொற்றாள் பட வாளி வெந்தீச்-
    சுட்ட கருங் கட்டையும் பெற்றது ஆர் உயிர் ; சொல்வது என்னே ?

    பதவுரை :

    பசுந் துளவின் பசுமையான திருத்துழாயினால் ஆன
    மட்டு அவிழ் தொங்கல் மணம் வீசும் மாலைகளை உடைய
    அரங்கர் பொற்றாள் பட திருவரங்கரது அழகிய திருவடி பட்டவுடன் ,
    நெட்டரவின் பெரு மூச்சு எழ பெரிய காளிங்கன் எனும் நாகத்தின் பெரு மூச்சு எழும்படி
    வீசு நெருப்பில் வெந்து பட்ட வீசும் விஷ அக்னிச் சுவாலையில் எரிந்து போன
    கடம்பும் தழைத்தது மீள கடம்பமரமும் மறுபடியும் வளர்ந்தது ;
    வாளி வெந்தீ அசுவத்தாமன் ஏவிய அம்பின் கொடிய நெருப்பினால்
    சுட்ட கருங் கட்டையும் சுடப்பட்ட பரீட்சித்தின் உடல் ஆகிய கரும் கட்டையும்
    பெற்றது ஆர் உயிர் அரிய உயிரை அடைந்தது
    சொல்வது என்னே பெருமையை மேலே என்ன சொல்லுவது ?

    V.Sridhar
    Last edited by sridharv1946; 12-12-13, 13:56.
Working...
X