5. திருவரங்கத்து மாலை - 72/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 22/25 (சூரியன் மறைப்பு )
இருள் தந்தது என்ன மாயம் ?
மா இரு ஞாயிறு பாரதப் போரில் மறைய , அங்ஙன் ,
பாய் இருள் நீ தந்தது என்ன கண் மாயம் - பவள நெற்றிச்-
சேய் உயர் மா மதில் சூழ் அரங்கேச ! திரண்டு உதித்த
ஆயிர கோடி திவாகரன் போல் ஒளிர் ஆழி கொண்டே ?
பதவுரை :
பவள நெற்றிச் சேய் பவழத்தால் ஆன உச்சியை உடைய
உயர் மா மதில் சூழ் நெடுந்தூரம் உயர்ந்த பெரிய மதிலால் சூழப்பட்ட
அரங்கேச ! திரு அரங்க நாதனே !
நீ பாரதப் போரில் நீ பாரதப் போரில்
திரண்டு உதித்த ஒருங்கே உதயமான
ஆயிர கோடி திவாகரன் போல் பல கோடி சூரியர்கள் போலப்
ஒளிர் ஆழி கொண்டே பிரகாசிக்கின்ற உனது சக்கரத்தால்
மா இரு ஞாயிறு மறைய மிகவும் பெரிய சூரியன் மறையும்படி
அங்ஙன் பாய் இருள் தந்தது அவ்வாறு பரவிய இருட்டை உண்டாக்கியது
என்ன கண் மாயம் என்ன கண் கட்டு வித்தையோ ?
V.Sridhar