5. திருவரங்கத்து மாலை - 70/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 20/25 (திரௌபதி)
தண் துளவம் புனை தார் அரங்கா ! ஐவர் தையலுக்கு
வண் துகில் ஒன்று , அவைக் கண் உற்றபோது - தன மன்னர் முன்னே
கண் துளி சோரத் தொழுது , நின் பேர் கட்டுரைத்த பின்னை
ஒண் துகில் கோடி குவிந்தது எம் மாயம் , உரிந்து உரிந்தே ?
பதவுரை :
தண் துளவம் புனை குளிர்ந்த திருத் துழாயினால் தொடுக்கப்பட்ட
தார் அரங்கா மாலையை உடைய அரங்கா !
அவைக் கண் உற்றபோது திரௌபதி துரியோதனன் சபைக்கு இழுத்து வரப்பட்டபோது
தன மன்னர் முன்னே தன் கணவர்களான பாண்டவர்கள் முன்பாக
கண் துளி சோரத் தொழுது கண்ணீர் சிந்தும்படி அழுது வணங்கி
நின் பேர் கட்டுரைத்த பின்னை உன் திரு நாமத்தை சொன்ன பிறகு
ஐவர் தையலுக்கு பாண்டவர்கள் மனைவியான அவளுக்கு
ஒண் துகில் கோடி அழகிய ஆடை ஒன்று தானே சிறந்த ஆடைகளாக
உரிந்து உரிந்தே குவிந்தது கழன்று கழன்று திரண்டது
எம் மாயம் என்ன மாயமோ ?
V.Sridhar