5. திருவரங்கத்து மாலை - 69/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 19/25
பாவிக்க ஒணாத பெருமாள் வினோதம் பகருமதோ ?
வாவிக்குள் நாரதன் நாரதி ஆய் , ஒரு மன்னவன் தன்
ஆவிக் குலக் கோடி ஆய் , நெடும் காலத்து அழிவு இல் இன்பம்
மேவி , குடும்பத்து இடும்பை எல்லாம் எய்தி விட்டனனே !
பதவுரை :
பாவிக்க ஒணாத எண்ண முடியாத
பெருமாள் வினோதம் நம்பெருமானது திருவிளையாட்டு
பகருமதோ எளிதில் சொல்ல முடியுமா ? (முடியாது)
வாவிக்குள் நாரதன் நாரதி ஆய் ஒரு குளத்தில் , நாரதன் நாரதி என்ற பெண் ஆகி ,
ஒரு மன்னவன் தன் ஒரு அரசனுடைய
ஆவிக் குலக் கொடி ஆய் உயிரை ஒத்த சிறந்த பூங்கொடி போன்ற மனைவி ஆகி
நெடும் காலத்து பல நாட்கள்
அழிவு இல் இன்பம் மேவி குறைவு இல்லாத சிற்றின்பத்தை அடைந்து
குடும்பத்து இடும்பை எல்லாம் குடும்பத்தில் உண்டாகும் துன்பங்களை எல்லாம்
எய்தி விட்டனனே அடைந்தான்
V.Sridhar