Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 68/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 68/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

    5. திருவரங்கத்து மாலை - 68/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 18/25

    விடம் தோய் அரவில் துயில் அரங்கேச ! - விசும்பு முட்ட
    நடந்து , ஓகை தன்னுடன் , நாரதன் காண - நகைக்கும் முத்து
    வடம் தோய் வனமுலை எண்-இரண்டாயிரம் மாதர் தங்கள்
    இடம் தோறும் நின்று , எழில் வேறாய் இருந்தது அங்கு எவ்வண்ணமே ?

    பதவுரை :

    விடம் தோய் அரவில் நஞ்சு பொருந்திய பாம்புப் படுக்கையில்
    துயில் அரங்கேச யோக நித்திரை செய்யும் அரங்க நாதனே !
    நாரதன் நீ கிருஷ்ணாவதாரத்தில் நாரதன்
    விசும்பு முட்ட நடந்து காண வானத்தை அணுகிப் பார்க்கும்போது
    ஓகை தன்னுடன் ஒளி விடுகின்ற
    நகைக்கும் முத்து வடம் தோய் முத்தாரங்கள் நிறைந்த
    வன முலை அழகிய தனங்கள் உடைய
    எண்-இரண்டாயிரம் மாதர் தங்கள் பதினாறாயிரம் பெண்களுடைய
    அங்கு இடம் தோறும் நின்று வீடு தோறும்
    எழில் வேறாய் இருந்தது வெவ்வேறு வடிவமாய் நிலையாக இருந்தது
    எவ்வண்ணமே எவ்வாறு ?


    V.Sridhar

Working...
X