5. திருவரங்கத்து மாலை - 66/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 16/25 (பாரிஜாத மரம்)
அருள் கொண்டல் அன்ன அரங்கர் சங்கு ஓசையில் அண்டம் எல்லாம்
வெருள் கொண்டு , இடர் பட , மோகித்து வீழ்ந்தனர் - வேகமுடன்
தருக்கொண்டு போகப் பொறாதே தொடரும் சதமகனும் ,
செருக் கொண்ட முப்பது முக்கோடி தேவரும் , சேனையுமே
பதவுரை :
தருக்கொண்டு போகபாரிஜாத மரத்தைப் பெயர்த்து துவாரகைக்குக் கொண்டு போக ,
பொறாதே அதனை மனம் பொறுக்காமல்
வேகமுடன் தொடரும் வேகத்தோடு பின் தொடர்ந்த
சத மகனும் நூறு யாகங்கள் செய்த இந்திரனும் ,
செருக் கொண்ட போர் செய்யும்
முப்பது முக்கோடி தேவரும் முப்பது முக்கோடி தேவர்களும்
சேனையுமே அவர்களது படையும் ,
அருள் கொண்டல் அன்ன கருணை மழை பொழியும் மேகம் போன்ற
அரங்கர் சங்கு ஓசையில் திரு அரங்க நாதரது சங்கின் ஓசையால்
அண்டம் எல்லாம் அகில உலகங்களும்
வெருள் கொண்டு இடர் பட அச்சம் கொண்டு துன்பம் அடைய
மோகித்து வீழ்ந்தனர் மயக்கம் அடைந்து வீழ்ந்தனர்
V.Sridhar