5. திருவரங்கத்து மாலை - 64/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 14/25
மறியா எழும் திரை மா நீர் மதுரையில் மன்னவரைக்-
குறியாதவன் படை வந்த அந்நாள் , செழும் கோகனகப்-
பொறி ஆடு அரவணைத் தென் அரங்கா ! ஒரு பூதரும் அங்கு
அறியா வகைத் துவரா பதிக்கே எங்ஙன் ஆக்கினையே ?
பதவுரை :
செழும் கோகனகப் பொறி செழித்த செந்தாமரையில் இருக்கும் திருமகளை உடைய ,
ஆடு அரவணை படம் எடுத்து ஆடுகிற ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்ட
தென் அரங்கா திரு அரங்க நாதா !
மறியா எழும் திரை மடங்கி எழும் அலைகளை உடைய ,
மா நீர் மதுரையில் மிக்க நீர் வளத்தை உடைய மதுரையில்
மன்னவரைக் குறியாதவன் வேறு அரசர்களை மதிக்காத கால யவனனுடைய
படை வந்த அந்நாள் சேனை யுத்தம் செய்ய வந்த பொழுது
ஒரு பூதரும் அங்கு அறியா வகை ஒருவரும் அறியா வண்ணம்
துவரா பதிக்கே மதுரையில் இருந்த அனைவரையும் துவாரகைக்கு
எங்ஙன் ஆக்கினையே எப்படி கொண்டு போய் சேர்த்தாய் ?
V.Sridhar