5. திருவரங்கத்து மாலை - 62/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 12/25 (அக்குரூரர் )
நீரிலும் , தேரிலும் நீல வண்ணனைக் கண்டான் அக்ரூரன்
நீரில் புகும் ; கண்டு தேரினைப் பார்க்கும் ; நிறுத்திய பொன்
தேரில் தொழும் ; பின்னை , நீரினில் காணும் - சிறந்த பச்சைக்-
காரின் திற மெய் அரங்கனும் , சேடனும் , கஞ்ச வஞ்சன்
ஊரில் செல , உடன் போம் அக்குரூரன் - தன உள் மகிழ்ந்தே
பதவுரை :
சிறந்த பச்சைக்காரின் சிறந்த நீல மேகம் போன்ற
திற மெய் அரங்கனும் தன்மை உள்ள திரு மேனி உடைய கண்ணனும் ,
சேடனும் ஆதி சேஷன் அவதாரம் ஆன பல ராமனும்
கஞ்ச வஞ்சன் ஊரில் செல வஞ்சகக் கம்சன் ஊரான வட மதுரை செல்ல
உடன் போம் அக்குரூரன் அவர்களை அழைத்துச் சென்ற அக்ரூரன்
நீரில் புகும் நீராட நீரிலே சென்று
கண்டு அந்த இருவரையும் நீரினுள் பார்த்து வியந்து
தேரினைப் பார்க்கும் கரைக்கு ஓடி வந்து தேரினைப் பார்ப்பார்
நிறுத்திய பொன் தேரில் அங்கும் அவர்கள் இருப்பதைக் கண்டு
தன உள் மகிழ்ந்தே தொழும் மனம் மகிழ்ந்து அவர்களைத் தொழுவார்
பின்னை , நீரினில் காணும் மறுபடியும் அவர்களை நீரினில் பார்ப்பார்
அடுத்து வருவது : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 13/25
V.Sridhar