5. திருவரங்கத்து மாலை - 61/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 11/25 (ராஸக் கிரீடை)
மின்-இடை இடை-மாதரை அண்டர் அன்போடு அணைத்துத் துயின்றது எம் மாயம் ?
மின் போல் இடை இடை மாதர் எல்லாம் உன் தன் மெய் தழுவி ,
நன் போக சாகரத்துள்ளே முழுகவும் - நாள் மலராள்
தன போகமே மகிழ் தார் அரங்கா ! - அண்டர் தாம் அவரை
அன்போடு அணைத்துத் துயின்றது எம் மாயம் ? அறிந்திலமே
பதவுரை :
நாள் மலராள் தன போகமே தாமரை மலரில் இருக்கும் திருமகளது இன்பத்தையே
மகிழ் தார் அரங்கா மகிழ்கின்ற மாலையை உடைய திரு அரங்கா !
மின் போல் இடை மின்னல் போன்ற மெல்லிய இடையை உடைய
இடை மாதர் எல்லாம் கோப கன்னிகள் யாவரும்
உன் தன் மெய் தழுவி உன் திருமேனியைத தழுவிக் கொண்டு
நன் போக சாகரத்துள்ளே முழுகவும் சிறந்த இன்பக் கடலில் அழுந்தி இருக்கவும் ,
அண்டர் தாம் அவரை அவர்களுடைய கணவர்கள் அவர்களை
அன்போடு அணைத்து குற்றம் பார்க்காமல் விரும்பித தழுவி
துயின்றது எம் மாயம் தூங்கியது என்ன மாயை ?
அறிந்திலமே தெரியவில்லை !
அடுத்து வருவது : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 12/25
V.Sridhar