5. திருவரங்கத்து மாலை -60/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 10/25 (ராஸக் கிரீடை)
இடைக் கன்னியர்கள் இடையிடையே இன்ப நடம் ஆடிய மாயம் என் ? இயம்பு !
ஊரும் திரைப் பொன்னி நல் நீர் அரங்க ! உருப் பல் ஆய்
காரும் தடித்தும் கலந்தது போல் , இடைக் கன்னியர்கள்
யாரும் களிக்க , இடையிடையே கலந்து , இன்ப நலம்
கூரும் திரு நடம் ஆடிய மாயம் என் கூறுகவே ?
பதவுரை :
ஊரும் திரைப் பொன்னி மேன்மேலும் வரும் அலைகளை உடைய காவிரியின்
நல் நீர் அரங்க ! நல்ல நீரால் சூழப்பட்ட திரு அரங்க நாதனே !
இடைக் கன்னியர்கள் இளமையான இடை பெண்கள்
யாரும் களிக்க யாவரும் மகிழும்படி
உருப் பல் ஆய் பல திரு உருவம் கொண்டு
காரும் தடித்தும் மேகமும் மின்னலும்
கலந்தது போல் ஒரு சேரக் கலந்தது போல்
இடையிடையே கலந்து அவர்கள் இடையே கலந்து கொண்டு
இன்ப நலம் கூரும் இன்பம் மிகுகின்ற
திரு நடம் ஆடிய திரு நடனத்தை ஆடிய
மாயம் என் கூறுகவே ? மாயத்தை என்ன என்று சொல்லுவது ?
அடுத்து வருவது : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 11/25
V.Sridhar