5. திருவரங்கத்து மாலை - 59/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 9/25
ஆனந்த வாரி குழல் ஊத , கானம் தழைத்தன , வானம் அயர்த்தன , வையம் மெய்ம் மறந்தனவே
கூன் நந்து உலா வயல் கோயில் உள்ளே பள்ளி கொள்ளும் எங்கள்
ஆனந்த வாரி திருக் குழல் ஊத - அற தடிந்த
கானம் தழைத்தன ; கால் வரை நெக்கன ; கார் முகில் தோய்
வானம் அயர்த்தன ; வையம் எல்லாம் மெய்ம் மறந்தனவே
பதவுரை :
கூன் நந்து உலா வயல் வளைந்த சங்கங்கள் உலாவும் வயல்களை உடைய
கோயில் உள்ளே திருவரங்கம் பெரிய கோயிலின் உள்ளே
பள்ளி கொள்ளும் யோக நித்திரை செய்யும்
எங்கள் ஆனந்த வாரி எங்கள் பேரின்பக் கடல் ஆன கண்ணன்
திருக் குழல் ஊத அழகிய வேங்குழலை ஊதும்போது
அற தடிந்த கானம் தழைத்தன முற்றும் உலர்ந்த காடுகள் தழைத்தன ;
கால் வரை நெக்கன சாரல் மலைகள் உருகின ;
கார் முகில் தோய் கரிய மேகங்கள் உலாவும்
வானம் அயர்த்தன வானுலகம் சோர்ந்தன ;
வையம் எல்லாம் பூவுலகம் முழுவதும்
மெய்ம் மறந்தனவே தன் நிலை மறந்தன
அடுத்து வருவது : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 10/25
V.Sridhar