5. திருவரங்கத்து மாலை - 54/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 4/25
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் !
ஆரம் தரும் பொன்னி சூழ் அரங்கா ! உன் தன் ஆய்ச்சி வெகு
தூர நெடும் கயிறு எல்லாம் மிசை சேர்த்து வைத்தும் , அவை
ஈர மருங்கின் குறைந்திட , கண் பிசைந்து ஏங்கும் அவள்
வேர் அம்புய முகம் கண்டு , அளவு ஆன வினோதம் என்னே !
பதவுரை :
ஆரம் தரும் பொன்னி சூழ் மாலையை போல் காவிரியால் சூழப்பட்ட
அரங்கா ! திரு அரங்க நாதனே !
உன் தன் ஆய்ச்சி உன் தாயார் ஆன யசோதை
வெகு தூர நெடும் கயிறு எல்லாம் மிக நீண்ட கயிறு எல்லாவற்றையும்
மிசை சேர்த்து வைத்தும் மென்மேலும் சேர்த்துச் சேர்த்து சுற்றி வைத்தும்
அவை அக்கயிறுகள்
ஈர மருங்கின் குறைந்திட உன் அழகான இடையின் அளவினும் போதாமல்
கண் பிசைந்து ஏங்கும் அவள் கண்களைக் கசக்கி வருந்தும் அவளது
வேர் அம்புய முகம் கண்டு வேர்வை உடைய தாமரை போன்ற முகம் பார்த்து
அளவு ஆன நீ அக்கயிற்றின் அளவாக உன் திருமேனியை சுருக்கிய
வினோதம் என்னே ! மாயம் என்னவோ ?
அடுத்து வருவது : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 5/25 (ததி பாண்டன்)
V.Sridhar