5. திருவரங்கத்து மாலை - 52/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 2/25
உரலோடு கட்டிய பிள்ளை மருங்கில் வந்தது என்ன மாயம் ?
உன்னைக் களவில் உரலோடு கட்டி வைத்து , உன்னுடைய
அன்னைக்கு ஒருத்தி போது , அலை ஆழி மங்கை
தன்னைப் புணர்ந்து அருள் தார் அரங்கா ! அவள் தன மருங்கில்
பின்னிக் கொடு சென்ற பிள்ளை மற்று ஆர் எனப் பேசுகவே ?
பதவுரை :
அலை ஆழி அலைகளை உடைய பாற்கடலில் உதித்த
மங்கை தன்னைப் புணர்ந்து அருள் திருமகளுடன் சேர்ந்து அருளும்
தார் அரங்கா மாலையை உடைய திரு அரங்கனே !
உன்னைக் களவில் நீ வெண்ணெய் திருடியதற்காக
ஒருத்தி ஓர் இடைச்சி
உரலோடு கட்டி வைத்து உன்னை உரலுடன் சேர்த்துக் கட்டி வைத்து
உன்னுடைய அன்னைக்கு உனது தாயான யசோதைக்கு
போது அச்செய்தியை தெரிவிக்கச் சென்ற போது
அவள் தன மருங்கில் அந்த இடைச்சி தன இடுப்பில்
பின்னிக் கொடு சென்ற பிள்ளை கொண்டு போன குழந்தை
மற்று ஆர் எனப் பேசுகவே ? வேறு யார் என்று சொல்வேன் (நீயே அது) ?
அடுத்து வருவது : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 3/25 (காளிய நர்த்தனம்)
V.Sridhar