5. திருவரங்கத்து மாலை - 51/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 1/25
அரங்கன் வாய் மலருள் அனைத்தும் கண்டு அன்னை ஆனந்தம் அடைந்தாள் !
பண்டு விழுங்கிய பாரும் , திசையும் , பனிக் கடலும் ,
சண்ட நெடும் கிரித்தானம் , எல்லாம் சண்பகாடவி மேல்
மண்டு பெரும் புனல் சூழ் அரங்கேசர் தம் வாய் மலருள்
கண்டு மருவினள் சீர் நந்த கோபர் தம் காதலியே
பதவுரை :
சண்பகாடவி மேல் சண்பக மரச் சோலையின் மேல்
மண்டு பெரும் புனல் சூழ் பெருகிப் பாயும் காவிரி நீர் சூழ்ந்த
அரங்கேசர் திரு அரங்கத்தில் இருக்கும் எம்பெருமான் ஆகிய கண்ணன்
தம் வாய் மலருள் தனது சிவந்த ஆம்பல் மலர் பொன்ற வாயினுள்
பண்டு விழுங்கிய பாரும் முன்பு விழுங்கிய பூமியையும் ,
திசையும் பனிக் கடலும் திசைகளையும் , குளிர்ந்த கடலையும்
சண்ட நெடும் கிரித்தானம் எல்லாம் பெரிய மலையின் இடங்கள் எல்லாவற்றையும்
சீர் நந்த கோபர் தம் காதலியே ஸ்ரீ நந்தகோபருடைய மனைவி யசோதை
கண்டு மருவினள் பார்த்து மிக்க மகிழ்சசி அடைந்தாள்
அடுத்து வருவது : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 2/25 (தாமோதரன்)
V.Sridhar