5. திருவரங்கத்து மாலை - 46/114 : ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 6/8
அரங்கர் தம் சிலையின் கிண்கிணி ஓர் யாமம் கறங்கியதே !
பேர் ஒத்த ஆயிரம் பேர் மடிந்தால் , பிறங்கும் கவந்தம்
நேர் ஒத்த ஆடும் ; அது ஆயிரம் ஆடின் , நெடும் சிலையின்
ஏர் ஒத்த கிண்கிணி சற்று ஓலிடும் ; அது ஓர் யாமம் நின்று
கார் ஒத்த மேனி அரங்கர் தம் போரில் கறங்கியதே
பதவுரை :
பேர் ஒத்த ஆயிரம் மடிந்தால் பேர் புகழ் பெற்ற ஆயிரம் வீரர்கள் போரில் இறந்தால்
பிறங்கும் கவந்தம் தலை இல்லாத முண்டம் ஒன்று
நேர் ஒத்த ஆடும் நன்றாகக் கூத்தாடும்
அது ஆயிரம் ஆடின் அவ்வாறு ஆயிரம் முண்டங்கள் கூத்தாடினால்
நெடும் சிலையின் பெரிய வில்லில் கட்டப்பட்ட
ஏர் ஒத்த கிண்கிணி அழகுள்ள மணியானது
சற்று ஓலிடும் சிறிது நேரம் ஒலிக்கும்
கார் ஒத்த மேனி கரிய மேகத்தைப் போன்ற திரு மேனியை உடைய
அரங்கர் தம் போரில் அரங்க நாதர் ஆகிய ராமனுடைய போரில்
அது ஓர் யாமம் அந்த கோதண்டத்தில் உள்ள மணி ஒரு யாம காலம்
நின்று கறங்கியதே இடை விடாமல் ஒலித்தது
அடுத்து வருவது : ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 7/8
V.Sridhar