Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 44/114 : ஸ்ரீ தசரத ராம அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 44/114 : ஸ்ரீ தசரத ராம அவதார

    5. திருவரங்கத்து மாலை - 44/114 : ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 4/8

    ஒற்றைச் சரம் சுட்ட கடல் போல் , மற்றைக் கடல் வெந்தது எவ்வண்ணமோ ?

    ஒற்றைச் சரம் சுட்ட உட்கடல் போல் , புறத்து ஓலம் இட ,
    மற்றைக் கடல் வெந்தது எவ்வண்ணமோ ? - மத மா அழைக்க
    அற்றைக்கு உதவும் அரங்கர் வெங்கோபத்தை அஞ்சி , அரன் ,
    கற்றைச் சடையின் இடையே வெதும்பினள் கங்கையுமே

    பதவுரை :

    மத மா அழைக்க மதம் கொண்ட கஜேந்திரன் 'ஆதி மூலமே' என்று கூவி அழைக்க
    அற்றைக்கு உதவும் அரங்கர் அப்பொழுதே அதற்கு உதவிய அரங்கனின்
    வெங்கோபத்தை அஞ்சி கடுங்கோபத்திற்குப் பயந்து
    அரன் கற்றைச் சடையின்இடையே சிவனின் சடையினுள் இருந்த
    கங்கையுமே வெதும்பினள் கங்கா தேவியும் வெப்பம் அடைந்தாள் என்றால்
    ஒற்றைச் சரம் சுட்ட ராமனது ஒரு அம்பினால் சுடப்பட்ட
    உட்கடல் போல் உள்ளே இருந்த கடல் போலவே
    புறத்து மற்றைக் கடல் வெளியே இருந்த மற்ற கடல்களும்
    ஓலம் இட பேரொலி செய்யுமாறு
    வெந்தது எவ்வண்ணமோ வெதும்பியது எப்படியோ ?


    அடுத்து வருவது : ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 5/8


    V.Sridhar


Working...
X