5. திருவரங்கத்து மாலை - 43/114 : ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 3/8
மாதவர் கணையால் பாதவம் , பூதலம் , பாதலம் ஏழும் புண்பட்டவே !
மாதவர் , உம்பர் பெருமாள் , அரங்கர் , வலி உணராது ;
ஆதவன் மைந்தன் அயிர்த்த அந்நாள் , இலக்கு ஆய நெடும்
பாதவம் ஏழும் உடனே நெடும் கணை பட்டு உருவ ,
பூதலம் ஏழும் , ஏழு பாதலங்களும் , புண்பட்டவே
பதவுரை :
மாதவர் உம்பர் பெருமாள் மாதவனும் தேவர்களுக்குத் தலைவனும் ஆகிய
அரங்கர் அரங்கன் அவதாரமான ராமனுடைய
வலி உணராது வலிமையை அறியாமல்
ஆதவன் மைந்தன் சூரியன் மகனான சுக்ரீவன்
அயிர்த்த அந்நாள் சந்தேகித்த அக்காலத்தில்
இலக்கு ஆய ராம பாணத்திற்கு இலக்கு ஆன
நெடும் பாதவம் ஏழும் பெரிய மரா மரங்கள் ஏழும்
உடனே நெடும் கணை ஒரே சமயத்தில் நீண்ட ராம பாணம்
பட்டு உருவ துளைத்து சென்றதால்
பூதலம் ஏழும் பூமி முதலிய ஏழு மேல் உலகங்களும் ,
ஏழு பாதலங்களும் அதலம் முதலிய ஏழு கீழ் உலகங்களும்
புண்பட்டவே காயம் பட்டன
அடுத்து வருவது : ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 4/8
V.Sridhar