5. திருவரங்கத்து மாலை - 42/114 : ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 2/8
மாகம் , பிலம் , திக்கு , இமையோர் உலகம் , மழுவுடையோன்
நாகம் , நல நாடு அளவாக - பல் நாகம் நடுங்க , அம்பு
வேகம் கொடு தொடர - பறந்து ஓடியும் , மீண்டு வந்து
காகம் 'சரண்' என்ன , நம்பெருமாள் உயிர் காத்தனரே
பதவுரை :
காகம் சீதையைத் துன்புறுத்திய காகாசுரன்
பல் நாகம் நடுங்க பல திசைகளிலும் உள்ள விலங்குகளும் அஞ்சி நடுங்கும்படி
அம்பு வேகம் கொடு தொடர இராமனது அம்பு தொடர்ந்து வருவதால்
மாகம் பிலம் வானமும் , பாதாள உலகும் ,
திக்கு இமையோர் உலகம் திசைகளும் , தேவர்கள் உலகமும் ,
மழுவுடையோன் நாகம் மழு ஏந்திய சிவனின் கைலாச மலையும்
நல நாடு அளவாக நல்ல இந்த பூ உலகமும் வரையிலும்
பறந்து ஓடியும் பறந்து ஓடிப் போய்ப் பார்த்தும்
மீண்டு வந்து புகலிடம் இல்லாததால் திரும்பி ராமனிடம் வந்து
'சரண்' என்ன நீயே சரணம் என்று அடைக்கலம் புக
நம்பெருமாள் ரங்க நாதன் ஆகிய ராமன்
உயிர் காத்தனரே காக்கையின் உயிரைப் பாதுகாத்தான்
அடுத்து வருவது : ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 3/8
V.Sridhar