5. திருவரங்கத்து மாலை - 41/114 : ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 1/8
கோதண்ட ஓசையால் மூதண்டம் அஞ்சும் மழுவாளி முனிந்தார் !
மா தண்டம் மேவும் கரத்தார் , அரங்கர் , வட மிதிலைக்-
கோதண்டம் வேதம் பிறப்பித்த போது - குவட்டு வெள்ளி
வேதண்டம் மேய மழுவாளி நாணினன் ; வென்றி கண்டு
மூதண்டம் அஞ்சும் மழுவாளி கோபம் முதிர்ந்ததுவே
பதவுரை :
மா தண்டம் மேவும் கரத்தார் பெரிய கௌமோதகி எனும் கதாயுதம் கரத்தில் கொண்ட
அரங்கர் திரு அரங்க நாதர்
வட மிதிலைக் கோதண்டம் வடக்கே மிதிலையில் கோதண்டம் எனும் வில்லை
வேதம் பிறப்பித்த போது வளைத்து முறித்து பெருத்த ஓசை உண்டாக்கியபோது
குவட்டு வெள்ளிசிகரம் உடைய வெள்ளி மலையான கைலாயத்தில்
வேதண்டம் மேய பொருந்தி வாழும்
மழுவாளி நாணினன் மழுவைக் கையில் உடைய சிவன் வெட்கினான்
வென்றி கண்டு ஸ்ரீ ராம பிரானது வெற்றி கண்ட
மூதண்டம் அஞ்சும் பழமையான அண்டத்தில் உள்ள எல்லோரும் அஞ்சும்
மழுவாளி கோடலியை உடைய பரசு ராமனின்
கோபம் முதிர்ந்ததுவே கோபம் அதிகரித்தது
அடுத்து வருவது : ஸ்ரீ தசரத ராம அவதார வைபவம் 2/8
V.Sridhar