Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 37/114 : ஸ்ரீ வாமன் அவதார வை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 37/114 : ஸ்ரீ வாமன் அவதார வை

    5. திருவரங்கத்து மாலை - 37/114 : ஸ்ரீ வாமன் அவதார வைபவம் 3/4

    செஞ்சுடர் சிகாமணி ஆகி , கவுத்துவம் ஆய் , நாபித் தாமரை ஆனது

    பூ மரு பொங்கர் புடை சூழ் அரங்கர் பொலங்கழலால்
    பா மரு மூவுலகும் கொண்ட போது பழிப்பு இல் பெரும்
    கா மரு மோலிச் சிகாமணி ஆகி , கவுத்துவம் ஆய்
    தே மரு நாபி அம் தாமரை ஆனது - செஞ்சுடரே

    பதவுரை :

    பூ மரு பொங்கர் மலர்கள் நிறைந்த சோலைகள்
    புடை சூழ் அரங்கர் நாற்புறமும் சூழ்ந்துள்ள திரு அரங்க நாதன்
    பொலங்கழலால் அழகிய திருவடிகளால்
    பா மரு மூவுலகும் பரந்த மூவுலகங்களையும்
    கொண்ட போது அளந்து தமது ஆக்கிக் கொண்ட போது
    செஞ்சுடரே சிவந்த கிரணங்களை உடைய சூரிய மண்டலம்
    பழிப்பு இல் பெரும் கா மரு குற்றம் இல்லாத பெரிய அழகிய முடியில் உள்ள
    மோலிச் சிகாமணி ஆகி சிரோ ரத்தினம் போன்று இருந்தது
    கவுத்துவம் ஆய் பிறகு மார்பில் உள்ள கௌஸ்துப ரத்தினம் போன்றும்
    தே மரு தேன் பொருந்திய
    நாபி அம் தாமரை ஆனது அழகிய திருநாபித தாமரை போன்றும் ஆனது

    அடுத்து வருவது : ஸ்ரீ வாமன அவதார வைபவம் 4/4


    V.Sridhar

Working...
X