Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 36/114 : ஸ்ரீ வாமன் அவதார வை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 36/114 : ஸ்ரீ வாமன் அவதார வை

    5. திருவரங்கத்து மாலை - 36/114 : ஸ்ரீ வாமன அவதார வைபவம் 2/4

    நேமிச் சிலம்பு நெடியான் கழற்கு திருச் சிலம்பு ஆகி நிலை பெற்றதே !

    தே மிக்க பச்சைத் துழாய் அரங்கேசர் திருக் குறள் ஆய்த்-
    தாம் இப்புவனம் கடந்த அந்நாள் மணல் சாகரம் சூழ்
    பூமிப் புடை அளவிட்ட பொற்றாமரைப் பூங்கழற்கு
    நேமிச் சிலம்பு திருச் சிலம்பு ஆகி நிலை பெற்றதே

    பதவுரை :

    தே மிக்க பச்சை தேன் மிகுந்த பசுமையான
    துழாய் அரங்கேசர்திருத்துழாய் மாலை அணிந்த அரங்க நாதர்
    திருக் குறள் ஆய் ஸ்ரீ வாமன மூர்த்தி ஆகி
    தாம் இப்புவனம் கடந்த அந்நாள் இந்த உலகங்களை அளந்த பொழுது
    மணல் சாகரம் சூழ் மணலை உடைய கடலால் சூழப்பட்ட
    பூமிப் புடை அளவிட்ட பூமியை அளந்த
    பொற்றாமரைப் பூங்கழற்கு தாமரை போன்ற திருவடிக்கு
    நேமிச் சிலம்பு பூமியைச் சுற்றி உள்ள சக்கர வாள மலை
    திருச் சிலம்பு ஆகி அழகிய சிலம்பு ஆகி
    நிலை பெற்றதே நிலைத்து நின்றது

    அடுத்து வருவது : ஸ்ரீ வாமன் அவதார வைபவம் 3/4


    V.Sridhar



    Last edited by sridharv1946; 02-12-13, 20:41.
Working...
X