Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 34/114 : ஸ்ரீ நரசிம்ஹ அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 34/114 : ஸ்ரீ நரசிம்ஹ அவதார

    5. திருவரங்கத்து மாலை - 34/114 : ஸ்ரீ நரசிம்ஹ அவதார வைபவம் 4/4

    அறியின் , அரங்கர் , முன் , ஆளரி ஆகிய அப்பொழுது ,
    கொறியின் அவுணர் தம் வெள்ளங்கள் கோடியும் கொன்றதிலோ -
    தறியின் , வயிற்றின் , தகுவன் நெஞ்சும் , சரபத்து உடலும்
    நெறியின் , வகிர்ந்த பின் , அன்றோ - தணிந்தது நீள் சினமே

    பதவுரை :

    அறியின் ஆராய்ந்து அறியும்போது
    அரங்கர் அரங்க நாதர்
    முன் ஆளரி ஆகிய அப்பொழுது முன்பு நரசிங்கமாக அவதரித்த போது
    கொறியின் அவுணர் தம் ஆடுகள் போன்ற அசுரர்களின்
    வெள்ளங்கள் கோடியும் கோடி வெள்ளங்களையும்
    கொன்றதிலோ நீள் சினமே கொன்ற பிறகும் தணியாத நீண்ட கோபம்
    தறியின் வயிற்றின் அவர் தோன்றிய தூணின் நடு இடத்தைப் பிளந்தது போலே
    தகுவன் நெஞ்சும் அசுரனான ஹிரண்யனுடைய மார்பையும் ,
    சரபத்து உடலும் சரபத்தின் உடலையும்
    நெறியின் வகிர்ந்த பின் அன்றோ ன்கு பிளந்த பின் அன்றோ
    தணிந்தது தணிந்தது ?


    அடுத்து வருவது : ஸ்ரீ வாமன அவதார வைபவம்

    V.Sridhar


Working...
X