Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 33/114 : ஸ்ரீ நரசிம்ஹ அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 33/114 : ஸ்ரீ நரசிம்ஹ அவதார

    5. திருவரங்கத்து மாலை - 33/114 : ஸ்ரீ நரசிம்ஹ அவதார வைபவம் 3/4

    சிங்கப்படி
    தன் அடி , கடி , முடி , டி கண்டிலர் அரன் , அமரர் , அயன் அனைவருமே !

    அடி கண்டிலர் , அதலத்தவர் ; ஐம்முகனோடு , அமரர்
    கடி கண்டிலர் ; மலை வான் இவர்ந்தும் ; கமலத்து அயனார்
    முடி கண்டிலர் ; அண்ட மா முகடு ஏறியும் ; மூதுணர்ந்தோர்
    படி கண்டிலர் - அரங்கேசர் கொள் சிங்கப் படி தனக்கே

    பதவுரை :
    அரங்கேசர் கொள் அரங்க நாதர் கொண்ட
    சிங்கப் படி தனக்கே நரசிங்க உருவத்திற்கு
    அடி கண்டிலர் அதலத்தவர் கீழ் உலகத்தில் இருப்பவர் திருவடியைக் காண வில்லை ;
    ஐம்முகனோடு அமரர் சிவனும் , மற்றைய தேவர்களும்
    மலை , வான் இவர்ந்தும் கைலாச கிரி ,சுவர்க்கம் இவற்றில் ஏறினாலும்
    கடி கண்டிலர் அவ்வுருவத்தின் இடுப்பைக் காண முடியவில்லை ;
    கமலத்து அயனார் நாபித் தாமரையில் தோன்றிய பிரம்மா
    அண்ட மா முகடு ஏறியும் அண்ட கோளத்தின் உச்சி ஏறிய பின்னும்
    முடி கண்டிலர் நரசிம்ஹரின் திரு முடியைக் காணவில்லை ;
    மூதுணர்ந்தோர் எல்லாம் அறிந்த பழைய பெரியோரும்
    படி கண்டிலர் அவரது அளவைக் காணவில்லை

    அடுத்து வருவது : ஸ்ரீ நரசிம்ஹ அவதார வைபவம் 4/4


    V.Sridhar



    Last edited by sridharv1946; 02-12-13, 13:31.
Working...
X