5. திருவரங்கத்து மாலை - 32/114 : ஸ்ரீ நரசிம்ஹ அவதார வைபவம் 2/4
ஆளரி பிறந்த பின் அனைத்தும் பிறந்து பெருகிப் பிறங்கியதே !
மறந்த மறையும் , மழுங்கிய மந்திரமும் , மகமும் ,
இறந்த தெய்வங்களும் , எல்லாம் முன் எங்கு உறைந்து , எங்கு இயன்ற ?
அறம் தரும் கோயில் அரங்கன் அவ் ஆள் அரிக்கு ஆளரியாய்ப்-
பிறந்த பின் அன்றோ , பிறந்து பெருகிப் பிறங்கியதே !
பதவுரை :
மறந்த மறையும் மறக்கப்பட்ட வேதங்களும் ,
மழுங்கிய மந்திரமும் மகமும் விளங்காமல் போன மந்திரங்களும் , யாகங்களும் ,
இறந்த தெய்வங்களும் எல்லாம் ஒழிந்து போன தெய்வங்கள் யாவரும்
முன் எங்கு உறைந்து முன்பு எங்கு தங்கி ,
எங்கு இயன்ற எவ்விடத்தில் இயங்கின ?
அறம் தரும் தருமத்தை நிலை நிறுத்தும்
கோயில் அரங்கன் திரு அரங்கத்தில் இருக்கும் எம்பெருமான்
அவ் ஆள் அரிக்கு வீரமான அந்த ஹிரண்யன் என்னும் பகைவனுக்கு
ஆளரியாய்ப் பிறந்த பின் அன்றோ நரசிங்கமாய்த தோன்றிய பிறகு அல்லவா
பிறந்து பெருகிப் பிறங்கியதே இவையெல்லாம் வளர்ந்து விளங்கியது !
அடுத்து வருவது : ஸ்ரீ நரசிம்ஹ அவதார வைபவம் 3/4
V.Sridhar