5. திருவரங்கத்து மாலை - 31/114 : ஸ்ரீநரசிம்ஹ அவதார வைபவம் 1/3
ஈடும் எடுப்பும் இலா இறைவன் இவனே !
ஆடும் அரவில் துயில் அரங்கேசன் அரு மகற்கா
நீரும் தறியில் உதித்திலனேல் நிகிலப் பொருள்கள்
ஓடும் , புறத்தினும் , உண்மை எவ்வாறு , இவ்வுலகு , அறியும்
ஈடும் எடுப்பும் இலா ஒரு தெய்வம் இவன் எனவே ?
பதவுரை :
ஆடும் அரவில் படம் எடுத்து ஆடும் ஆதி சேஷன் மேல்
துயில் அரங்கேசன் யோக நித்திரை செய்யும் அரங்க நாதன்
அரு மகற்கா பெறுதற்கு அரிய மகனான பிரஹ்லாதனுக்காக
நீரும் தறியில் நீண்ட தூணிலிருந்து
உதித்திலனேல் நரசிம்ஹனாய் தோன்றவில்லை என்றால்
ஈடும் எடுப்பும் இலா ஒப்பான பொருளும் , மேம்பட்ட பொருளும் இல்லாத
ஒரு தெய்வம் இவன் எனவே ஒப்பற்ற கடவுள் இவனே என்று
நிகிலப் பொருள்கள் எல்லாப் பொருள்களினுடைய
ஓடும் புறத்தினும் உண்மை உள்ளிலும் வெளியிலும் திருமால் இருப்பதை
எவ்வாறு இவ்வுலகு அறியும் இந்த உலகம் எப்படி அறியும் ?
அடுத்து வருவது : ஸ்ரீநரசிம்ஹ அவதார வைபவம் 2/3
V.Sridhar