Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 27/114 : ஸ்ரீ கூர்ம அவதார வை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 27/114 : ஸ்ரீ கூர்ம அவதார வை

    5. திருவரங்கத்து மாலை - 27/114 : ஸ்ரீ கூர்ம அவதார வைபவம் 3/3

    ஓர் உரு , ஈர் உரு , பேர் உரு , நார் உரு - இது என்ன ந
    ல் தவமே !


    ஓர் உரு வெற்பைத் தரித்தது ; தானவர் உம்பர் உள்ளாய் ,
    ஈர் உரு நின்று கடைந்தது வேலை ; இதனிடை ஓர்
    பேர் உரு இன் அமுதோடே பிறந்தது ; பெண்மை கொண்டு ஓர்
    நார் உரு நின்றது ; அரங்கா இது என்ன ந
    ல் தவமே !

    பதவுரை :

    அரங்கா ரங்க நாதனே !
    ஓர் உரு வெற்பைத் தரித்தது உனது ஆமை வடிவம் மந்தர மலையைத் தாங்கியது ;
    தானவர் உம்பர் உள்ளாய் அசுரர்கள் பக்கமும் , தேவர்கள் பக்கமும் நின்று
    ஈர் உரு நின்று கடைந்தது வேலை உனது இரண்டு உருவங்கள் கடலைக் கடைந்தன ;
    இதனிடை ஓர் பேர் உரு கடலின் இடையே தன்வந்திரி என்ற ஒரு பெரிய உருவம்
    இன் அமுதோடே பிறந்தது இனிய அமுதத்தோடு தோன்றியது ;
    ஓர் நார் உரு மயங்க வைக்கும் ஒரு மோகினி உருவம்
    பெண்மை கொண்டு நின்றது பெண்மை கொண்டு நின்றது
    இது என்ன நல் தவமே ! இது என்ன தவத்தின் பயனோ ?


    அடுத்து வருவது : ஸ்ரீ வராஹ அவதார வைபவம் !



    --
    V.Sridhar


    Last edited by sridharv1946; 01-12-13, 17:11.
Working...
X