Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 26/114 : ஸ்ரீ கூர்ம அவதார வை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 26/114 : ஸ்ரீ கூர்ம அவதார வை

    5. திருவரங்கத்து மாலை - 26/114 : ஸ்ரீ கூர்ம அவதார வைபவம் 2/3

    தரா தலமே தாங்கிய ஆமைக்கு மந்தர மலை ஒரு பாரமா ?

    திரிக்கின்ற பொற்குன்று அழுந்தாமல் , திரு உருவாய் ,
    பரிக்கின்றதில் பெரும் பாரம் உண்டே ? பண்டு நான் மறை நூல்
    விரிக்கின்ற உந்தி அரங்கேசர் தம் திருமேனியின் மேல்
    தரிக்கின்றது மகரக் கடல் ஆடைத் தராதலமே

    பதவுரை :

    மகரக் கடல் ஆடை சுறா மீன்களை உடைய கடலை ஆடையாகக் கொண்ட
    தராதலமே இப் பூவுலகம் முழுவதும்
    பண்டு நான் மறை நூல் பழமையாய் , நான்கு வேதங்களாலும் , சாத்திரங்களாலும்
    விரிக்கின்ற உந்தி விரிவாகப் புகழப்படும் திரு நாபியை உடைய
    அரங்கேசர் திரு அரங்க நாதர்
    தம் திருமேனியின் மேல் ஆதி கூர்ம வடிவான தமது திருமேனியின் மேல்
    தரிக்கின்றது தாங்கப்படுகின்றது எனில்
    திரிக்கின்ற பொற்குன்று தற்போது கடையும் பொன் மயமான மந்தரமலை
    அழுந்தாமல் பாற் கடலுள் அழுந்தி விடாமல்
    திரு உருவாய் ஸ்ரீ கூர்ம ரூபியாய்
    பரிக்கின்றதில் அதனைச் சுமப்பதில்
    பெரும் பாரம் உண்டே ? அதிக பாரம் உண்டோ ? (இல்லை )

    அடுத்து வருவது : ஸ்ரீ கூர்ம அவதார வைபவம் 3/3
    1. V.Sridhar



Working...
X