5. திருவரங்கத்து மாலை - 24/114 :ஸ்ரீ மத்ஸ்ய அவதார வைபவம்
சூழிக் களிறு உய்ய , வெவ்வாய் முதலை துணித்த உக்ர
பாழித் திகிரிப் படை அரங்கேசர் படைப்பவன் தன்
ஊழிப் பொழுது , ஒரு சேல் ஆய் , ஒரு செலுவுள் கரந்த
ஆழிப் பெரும் புனல் , காணாது தேடுவர் , அவ்விடத்தே
பதவுரை :
சூழிக் களிறு உய்ய தடாகத்தில் இறங்கிய கஜேந்திரன் பிழைக்கும்படி
வெவ்வாய் முதலை துணித்த கொடிய வாயை உடைய முதலையை வெட்டிய
உக்ர பாழித் திகிரிப் படை வலிமை உள்ள சக்கராயுதத்தை உடைய
அரங்கேசர் அரங்க நாதர்
படைப்பவன் தன் ஊழிப் பொழுது பிரமனது ஒரு தினமான கற்பத்தின் முடிவில்
ஒரு சேல் ஆய் ஒப்பற்ற ஒரு மீன் வடிவம் ஆகி
ஒரு செலுவுள் கரந்த ஒரு புற முள்ளில் அடங்கிய
ஆழிப் பெரும் புனல் பெரிய கடல் வெள்ளத்தில்
காணாது வேதநகளையும் , அதைக் கவர்ந்த கோமுகாசுரனையும் காணாமல்
அவ்விடத்தே தேடுவர் அதே இடத்தில் தேடினார்
அடுத்து வருவது : ஸ்ரீ கூர்ம அவதார வைபவம்
V.Sridhar