Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 23/114 : அன்னத்தின் உள்ளே வ&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 23/114 : அன்னத்தின் உள்ளே வ&

    5. திருவரங்கத்து மாலை - 23/114 :அன்னத்தின் உள்ளே வளர்ந்த அண்டமே மூதண்டம் !

    பின்னைக்கு இனிய பெருமாள் , அரங்கர் , பெறாது பெற்ற
    முன்னைப் பிரமனை வாழ்விக்க வேண்டி , முன் நாள் கவர்ந்த
    அன்னைத் திரு உரு உள்ளே வளர்ந்ததற்கு ஓர் அண்டம் ஆம்
    என்னச் சிறந்தது , மூதண்டம் ; யாம் என் இயம்புவதே ?

    பதவுரை :

    பின்னைக்கு இனிய பெருமாள் நப்பின்னைக்கு இனிய கணவரான எம்பெருமான் ஆன
    முன்னை அரங்கர் அரங்கநாதன் கற்பத் தொடக்கத்தில்
    பெறாது பெற்ற பிரமனை அருமையாகப் பெற்ற மகனான பிரமனை
    வாழ்விக்க வேண்டி உய்விப்பதற்காக
    முன் நாள் கவர்ந்த முன்பு தான் கொண்ட
    அன்னைத் திரு உரு அன்னப் பறவையின் அழகிய உருவத்தின்
    உள்ளே வளர்ந்ததற்குஉள்ளே வளர்ந்திருந்த
    ஓர் அண்டம் ஆம் என்ன ஒரு முட்டை ஆகும் என்று சொல்லும்படி
    சிறந்தது மூதண்டம் பழமையான அண்டகோளம் சிறப்பு அடைந்தது
    யாம் என் இயம்புவதே ? அந்த அன்னத்தைப் பற்றி நான் என் சொல்ல முடியும் ?


    V.Sridhar

Working...
X