5. திருவரங்கத்து மாலை - 20/114 : அரங்கர் அண்டம் யாவும் படைத்து அருந்துவார் !
சின்னூல் பல பல வாயால் இழைத்து , சிலம்பி பின்னும்
அந்நூல் அருந்தி விடுவது போல் அரங்கர் அண்டம்
பல் நூறு கோடி படைத்து அவை யாவும் பழம் படியே
மன் ஊழி தன்னில் விழுங்குவர் , போத மனம் மகிழ்ந்தே
பதவுரை :
சிலம்பி சிலந்திப் பூச்சி
சின்னூல் பல பல பல பல மெல்லிய சிறிய நூல்களை
வாயால் இழைத்து வாயினால் நூற்று
பின்னும் அந்நூல் பின்னர் அந்த நூலைத் தானே
அருந்தி விடுவது போல் உட்கொள்வது போல்
அரங்கர் திருவரங்கநாதர்
அண்டம் பல் நூறு கோடி படைத்து பல நூற்றுக் கோடிக் கணக்கான அண்டங்களைப் படைத்து
அவை யாவும் பழம் படியே அவை எல்லாவாற்றையும் மீண்டும்
போத மனம் மகிழ்ந்தே மிகவும் திரு உள்ளம் மகிழ்ந்து
மன் ஊழி தன்னில் விழுங்குவர் பிரளய காலத்தில் விழுங்குவார்
V.Sridhar