5. திருவரங்கத்து மாலை - 19/114 : அரங்கன் அடி ஆறு அண்டம் எல்லாம் கொள்ளும் !
தாற்றுக் கமுக வனம் சூழ் அரங்கர் சயன முகக்-
காற்றுப் புலரும்படி முதல் வீசும் ; கறைக்களத்தன்
நீற்றுச் சிவந்து எழும் ; கார் ஆழித் தீச்சுடும் ; நீள் கழலின்
ஆற்றுப் பெரும் பெருக்கு அண்டம் எல்லாம் கொள்ளும் அந்தத்திலே
பதவுரை :
அந்தத்திலே கல்பாந்த காலத்திலே
தாற்றுக் கமுக வனம் சூழ் குலைகள் உள்ள பாக்கு மரம் உள்ள சோலைகள் சூழ்ந்த
அரங்கர் சயன அரங்க நாதரின் படுக்கை ஆன ஆதி சேஷனுடைய
முகக் காற்று ஆயிரம் முகங்களிலிருந்து எழுகின்ற காற்றானது
புலரும்படி முதல் வீசும் பொருள்கள் உலர்ந்து போகும்படி வீசும்
கறைக்களத்தன் நஞ்சுண்டு கருத்த கழுத்தை உடைய சிவன்
நீற்றுச் சிவந்து எழும் பொருள்களை சாம்பல் ஆக்கி கோபித்து தோன்றுவான்
கார் ஆழித் தீச்சுடும் கரிய கடலில் உள்ள வடவாமுகாக்கினி உலகை எரிக்கும்
நீள் கழலின் திருமாலின் நீண்ட திருவடி பட்ட துளை வழியாக
ஆற்றுப் பெரும் பெருக்கு பெருகும் பெரும் வெள்ளம்
அண்டம் எல்லாம் கொள்ளும் அண்டம் முழுவதையும் அழிக்கும்
--
V.Sridhar