5. திருவரங்கத்து மாலை - 18/114 : அரங்கனே அண்டமுண்டு ஆலிலையில் உறங்கியவன் !
ஓலப் புனல் பொன்னி நல் நீர் அரங்கர் , உகம் திரியும்
காலத்தினில் , கொள்ளை அண்டம் எல்லாம் உண்டு , காமர் பசுங்-
கோலக் குழவி உருவாய் , அகண்டமும் கோத்த வெள்ளத்து
ஆலத்து இலையின் புடைக்கே துயில்வார் அகம் மகிழ்ந்தே
பதவுரை :
ஓலப் புனல் பொன்னி ஆரவாரம் செய்யும் நீரையுடைய காவிரியின்
நல் நீர் அரங்கர் திவ்ய தீர்த்தம் சூழ்ந்த திரு அரங்க நாதர்
உகம் திரியும் காலத்தினில் கற்பகாலம் மாறும் காலத்தில்
கொள்ளை அண்டம் எல்லாம் உண்டு மிகுதியான அண்ட கோளங்களை விழுங்கி ,
காமர் பசுங்கோலக் குழவி உருவாய் விரும்பும் அழகை உடைய குழந்தை உருவில் ,
அகண்டமும் கோத்த வெள்ளத்து எங்கும் பரவிய பிரளய வெள்ளத்தில்
ஆலத்து இலையின் புடைக்கே ஆலிலையில்
துயில்வார் அகம் மகிழ்ந்தே உவந்து யோகா நித்திரை செய்வார்
V.Sridhar