5. திருவரங்கத்து மாலை - 15/114 : ஆக்குவதும் , அளிப்பதும் , அழிப்பதும் அரங்கனே !
இருகூலமும் பொரு மா நீர் அரங்கத்தில் எந்தை , அம் தண்
முருகு ஊர் கமல் முனி ஆய் , வகுக்கும் முறைமையினால் ,
புருகூதனுக்குத் திருத்தம்பி ஆகி , புரக்கும் ; உமை
ஒரு கூறு கொண்ட அரன் ஆய் , அழிக்கும் உகாந்தத்திலே
பதவுரை :
இருகூலமும் பொரு மா நீர் இரு கரைகளையும் மோதும் காவிரி நீரால்
அரங்கத்தில் எந்தை சூழப்பட்ட திருவரங்கத்தில் இருக்கும் எம்பெருமான்
அம் தண் முருகு ஊர் அழகிய , குளிர்ந்த வாசனை மிகுந்த
கமல முனி ஆய் தாமரை மலரில் இருக்கும் பிரமன் ஆகி
வகுக்கும் முறைமையினால் முறைப்படிப் படைத்து அருள்வான் ;
புருகூதனுக்குத் திருத்தம்பி ஆகி தேவேந்திரனுக்குத் தம்பியாகத் தோன்றி
புரக்கும் காத்து அருள்வான் ;
உமை ஒரு கூறு கொண்ட பார்வதியை உடலில் பாதியாகக் கொண்ட
அரன் ஆய் அழிக்கும் உகாந்தத்திலே சிவன் ஆகி யுக முடிவில் அழித்து அருள்வான் .
V.Sridhar