5. திருவரங்கத்து மாலை - 14/114 :அரங்கன் உந்தி மலரில் , பிரமன் ஓர் பிரமரம் !
புறக்குன்று , புல் இதழ் ; முந்நீர் , பிரசம் ; பொரு இல் செம்பொன்
நிறக் குன்று , கன்னிகை ; எண் கிரி , தாது ; நிலம் , அதனுள்
பிறக்கும் துகள் ; முது மாசுணம் , நாளம் ; பிரமன் , வண்டு ;
சிறக்கும் திகிரி அரங்கேசர் உந்திச் செழு மலர்க்கே .
பதவுரை :
சிறக்கும் திகிரி மேன்மை உடைய சக்கராயுதம் ஏந்திய
அரங்கேசர் உந்தி திரு அரங்க நாதருடைய திரு நாபியில் தோன்றிய
செழு மலர்க்கே செழுமையான தாமரை மலர்க்கு
புறக்குன்று புல் இதழ் கடலுக்கு அப்பால் உள்ள சக்கரவாள மலை புற இதழாம் ;
முந்நீர் பிரசம் கடல் தேனாம் ;
பொரு இல் செம்பொன் ஒப்பில்லாத சிவந்த பொன் மயமான
நிறக் குன்று கன்னிகை ஒளி உடைய மா மேரு மலை கொடடையாம் ;
எண் கிரி தாது எட்டு குல பர்வதங்கள் அக இதழ்களாம் ;
நிலம் அதனுள் பிறக்கும் துகள் பூமி அதனுள் தோன்றும் மகரந்தப் பொடியாம் ;
முது மாசுணம் நாளம் பழமையான பெரும் ஆதி சேஷன் எனும் அம்பு தண்டாம் ;
பிரமன் வண்டு பிரம்மா வண்டு ஆவான் .
V.Sridhar