5. திருவரங்கத்து மாலை - 13/114 :விண்ணவர் கண்ணை விஞ்சுவது கண்ணனின் கண்ணே !
எண்ணில் , திகிரிப் பிறப்பிடம் ஆனதும் , எண்ணும் அவர்
நண்ணிச் சிறக்க இருப்பிடம் ஆனதும் , நாசம் இல்லா
விண்ணின் பதிக்குக் கடைத்தலை ஆனதும் , விண்ணவர் தம்
கண்ணில் சிறந்ததும் - மாநீர் அரங்கர் தம் கண்ணில் ஒன்றே
பதவுரை :
எண்ணில் ஆராய்ந்து பார்க்கும்போது ,
திகிரிப் பிறப்பிடம் ஆனதும் சூரியனுக்கு பிறந்த இடம் ஆனதும்
எண்ணும் அவர் தன்னை வழிபடும் அடியார்கள்
நண்ணிச் சிறக்க இருப்பிடம் ஆனதும் நன்கு மேன்மை அடைய காரணம் ஆனதும்
நாசம் இல்லா விண்ணின் பதிக்கு எக்காலத்திலும் அழியாத பரமபதம் செல்வதற்கு
கடைத்தலை ஆனதும் தலை வாயில் ஆனதும்
விண்ணவர் தம் தேவர்களுடைய
கண்ணில் சிறந்ததும் கண்களைக் காட்டிலும் மேன்மை ஆனதும்
மா நீர் அரங்கர் தம் சிறந்த காவிரி நீர் சூழ்ந்த திரு அரங்க நாதரின்
கண்ணில் ஒன்றே கண்களில் ஓன்றே ஆகும்
V.Sridhar