5. திருவரங்கத்து மாலை - 12/114 : நான்முகன் ஆவி எல்லாம் , நம் நாதருக்கு ஒரு மூச்சு!
முன்னாள் விசும்பும் , புவியும் , திசையும் முறை வகுத்த
அந்நான்முகன் தனது ஆவி எல்லாம் மலர் ஆசனை ஆம்
மின்னார் மழை முகில் நல் நாகம் மீதில் விழி துயில் கூர்
எம் நாதருக்கு ஒரு மூச்சு என்று வேதம் இசைக்கின்றதே
பதவுரை :
முன்னாள் பிரம்மா தோன்றிய முன் காலத்தில் ,
விசும்பும் புவியும் திசையும் ஆகாயத்தையும் , பூமியையும் , எட்டு திசைகளையும்
முறை வகுத்த வகைப்படுத்தி உண்டாக்கிய
அந்நான்முகன் தனது அந்த பிரமனுடைய
ஆவி எல்லாம் வாழ் நாள் முழுவதும்
மலர் ஆசனை ஆம் தாமரையில்வீற்றிருக்கும் திரு மகள் ஆகிய
மின்னார் மின்னல் பொருந்திய
மழை முகில் கார் காலத்து மேகம் போன்று கரிய நிறமுடைய
நல் நாகம் மீதில் சிறந்த ஆதி சேஷன் மேல்
விழி துயில் கூர் கண் வளரும்
எம் நாதருக்கு நம் பெருமாளுக்கு
ஒரு மூச்சு என்று ஒரு சுவாசம் என்று
வேதம் இசைக்கின்றதே வேதம் சொல்லுகிறது
V.Sridhar