5. திருவரங்கத்து மாலை - 10/114 :அரங்கேசரிடமிருந்து அனைவரும் உதித்தனர் !
திண் சுடர் ஆழி அரங்கேசர் , திக்கு , திருச்செவியில் ;
மண் , கழலில் ; சத்ய லோகம் , சிரத்தில் ; மருத்து , உயிரில் ;
தண் கதிர் , உள்ளத்தில் ; வான் , உந்தியில் ; செந்தரணி , கண்ணில் ;
ஒண் கனல் , இந்திரன் வாழ் முக போதில் - உதித்தனரே
பதவுரை :
திண் சுடர் ஆழி வலிமையையும் ஒளியையும் உடைய சக்ராயுதத்தை ஏந்திய
அரங்கேசர் திரு அரங்க நாதருடைய
திருச்செவியில் திக்கு அழகிய காதிலிருந்து திக்குகளும் ,
கழலில் மண் திருவடிகளிலிருந்து பூமியும் ,
சிரத்தில் சத்ய லோகம் திரு முடியிலிருந்து சத்ய லோகமும் ,
உயிரில் மருத்து உயிரிலிருந்து வாயுவும் ,
உள்ளத்தில் தண் கதிர் மனத்திலிருந்து குளிர்ந்த கதிருடைய சந்திரனும் ,
உந்தியில் வான் திரு நாபியிலிருந்து வானமும் ,
கண்ணில் செந்தரணி கண்ணிலிருந்து சிவந்த சூரியனும் ,
வாழ் முக போதில் சிறந்த தாமரை மலர் போன்ற முகத்திலிருந்து
ஒண் கனல் இந்திரன் ஒளியுள்ள அக்னியும் , இந்திரனும்
உதித்தனரே ஆதியில் தோன்றினார்கள்
V.Sridhar