Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 7/114 : கறங்கு ஆழியில் இறங&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 7/114 : கறங்கு ஆழியில் இறங&#

    5. திருவரங்கத்து மாலை - 7/114 :கறங்கு ஆழியில் இறங்கு ஆழி என உறங்கும் அரங்கன் !


    கறங்கு ஆழி நால் எட்டு இலக்கம் இயோசனை ; கட் செவியின்
    பிறங்கு ஆகம் மும்மை இலக்கம் இயோசனை ; பேர் உலகில்

    இறங்கு ஆழி மேகம் எனவே , அரங்கத்தில் எந்தை அதில்
    உறங்கு ஆகம் நீளம் ஐந்து ஐம்பதினாயிரம் ஓசனையே

    பதவுரை :

    கறங்கு ஆழி ஆரவாரிக்கும் திருப் பாற்கடலின் நீளம்
    நால் எட்டு இலக்கம் இயோசனை 32 லக்ஷம் யோசனை அளவாம்
    கட் செவியின் திரு அனந்தாழ்வானின் பிறங்கு ஆகம் மும்மை இலக்கம் இயோசனை விளங்கும் திரு உடம்பு 3 லக்ஷம் யோசனை
    பேர் உலகில் பெரிய இந்த நிலவுலகில்
    இறங்கு ஆழி மேகம் எனவே இறங்கி வந்த சக்ராயுதத்தை உடைய மேகம் போல்
    அரங்கத்தில் எந்தை திரு வரங்கத்தில் இருக்கும் எம்பெருமான்
    அதில் உறங்கு ஆதி சேஷன் மேல் யோக நித்திரை செய்யும்
    ஆகம் நீளம்திருமேனியின் நீளம்
    ஐந்து ஐம்பதினாயிரம் ஓசனையே இரண்டரை இலக்ஷம் யோசனை ஆகும்

    V.Sridhar

Working...
X