5. திருவரங்கத்து மாலை - 6/114 :பூங்காவிரியில் நீங்காது தூங்கும் ஓங்காரச் சுடரே !
பூங் காவிரிப் புனல் கோயிலுள்ளே , மிக்க போகம் எல்லாம்
யாம் காண யோகத்துயில் கொண்டவாறு - எள்ளும் எண்ணெயும் போல்
நீங்காது , உலகத்து உயிர்க்கு உயிர் ஆகி , நியாமகன் ஆய் ,
ஓங்காரம் ஆய் , அதன் உட்பொருளாய் நின்ற ஒண் சுடரே !
பதவுரை :
எள்ளும் எண்ணெயும் போல் நீங்காது எள்ளும் எண்ணெயும் போல் இடை விடாமல்
உலகத்து உயிர்க்கு உயிர் ஆகி எல்லா ஜீவராசிகளுக்கும் அந்தராத்மா ஆகவும் ,
நியாமகன் ஆய் அவைகளுக்குத் தலைவன் ஆகவும் ,
ஓங்காரம் ஆய் பிரணவ மந்திரத்தின் ஸ்வரூபி ஆகவும் ,
அதன் உட்பொருளாய் நின்ற அந்த மந்திரத்தின் பொருள் ஆகவும் நிலை பெற்ற
ஒண் சுடரே ஒளிவிடும் ஜோதியானது
பூங் காவிரிப் புனல் அழகிய காவி நதியின் நீரால் சூழப்பட்ட
கோயிலுள்ளே திருவரங்கம் பெரிய கோயிலின் உள்ளே
மிக்க போகம் எல்லாம் மிகுதியான போகங்களை எல்லாம்
யாம் காண நாம் அனுபவிக்குமாறு
யோகத்துயில் கொண்ட ஆறு யோக நித்திரை கொண்ட விதம் ஆச்சரியம் !
V.Sridhar