5. திருவரங்கத்து மாலை - 5/114 : காளாசலம் என ஆளான தாளாயிரத்தார் யார் ?
ஆள் ஆனவர் , கண் களி கூர் அரங்கத்து , அரவணை மேல்
காளாசலம் எனக் கண்டு கொண்டேன் - மறை காண ஒண்ணா
தாள் ஆயிரம் , செம்பொன் மா முடி ஆயிரம் , தாம நெடுந்-
தோள் ஆயிரம் , திருக்கண் ஆயிரம் கொண்ட சோதியையே
பதவுரை :
மறை காண ஒண்ணா வேதங்களாலும் அறிய முடியாத
தாள் ஆயிரம் ஆயிரம் திருவடிகளையும் ,
செம்பொன் மா முடி ஆயிரம் சிவந்த அழகிய பொன்முடி தரித்த ஆயிரம் முடிகளையும் ,
தாம நெடுந்தோள் ஆயிரம் மாலை தரித்த பெரிய ஆயிரம் தோள்களையும்
திருக்கண் ஆயிரம் ஆயிரம் கண்களையும்
கொண்ட சோதியையே கொண்ட ஒளி வடிவமான திருமாலை
கண் களி கூர் அடியார்கள் கண்டு களிப்பு அடையக்
ஆள் ஆனவர் காரணமான
அரங்கத்து அரவணை மேல் திருவரங்கத்தில் ஆதி சேஷன் எனும் படுக்கை மேல்
காளாசலம் என கரிய மலை கிடப்பதைப் போல
கண்டு கொண்டேன் கண்டேன்
V.Sridhar