5. திருவரங்கத்து மாலை - 4/114 : படுப்பவர் , தடுப்பவர் , எடுப்பவர் , கொடுப்பவர் யார் ?
படுப்பவரைப் பணி மேல் அணையாக , பரு வரையால்
தடுப்பவரைப் பண்டு , மண்டு கல் மாரி ; தரணி இடந்து
எடுப்பவரைத் , தம் அடியார் இடும் பச்சிலைக்கு முத்தி
கொடுப்பவரை - செம்பொற் கோயில் உள்ளே கண்டு கொண்டனனே
பதவுரை :
பணி மேல் அணையாக ஆதி சேஷன் எனும் பாம்பின் மேல் படுக்கையாக வைத்துப்
படுப்பவரை பள்ளி கொண்டு அருள்பவரும் ,
பண்டு மண்டு கல் மாரி முன்பு இந்திரன் பெய்வித்த மிகுதியான கல் மழையை
பரு வரையால் தடுப்பவரை கோவர்த்தனம் எனும் மலையால் தடுத்தவரும் ,
தரணி இடந்து வராஹ அவதாரத்தில் பூமியைக் கொம்பினால் குத்தி ,
எடுப்பவரைத் எடுத்தவரும் ,
தம் அடியார் இடும் பச்சிலைக்கு பக்தர்கள் பூசிக்கின்ற துழாய் தளத்திற்காக
முத்தி கொடுப்பவரை அவர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுப்பவரும் ஆன பெருமாளை
செம்பொற் கோயில் உள்ளே சிவந்த பொன் மயமான திருவரங்கத்தில்
கண்டு கொண்டனனே தரிசித்தேன்
V.Sridhar