Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 1/114 மணவாளர் தம் மாலையி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 1/114 மணவாளர் தம் மாலையி

    5. திருவரங்கத்து மாலை - 1/114 மணவாளர் தம் மாலையின் உட் பொருள் என்ன ?

    சிறப்புப் பா/யிரம் 1/2

    மறைப் பொருளோ , அச்சிரப் பொருளோ , மனுவே முதலாம்
    முறைப்பொருளோ , இதிகாச புராண முதுப்பொருளோ ,
    இறைப்பொருளாம் நம் பெருமாள் உடைத் திரு எட்டெழுத்துள்
    உறைப்பொருளோ - மணவாளர் தம் மாலையின் உட் பொருளே ?

    பதவுரை :

    மணவாளர் தம் அழகிய மணவாள தாசருடைய
    மாலையின் உட் பொருளே திருவரங்கத்து மாலையின் உள்ளெ அமைந்த பொருள்
    மறைப் பொருளோ வேதங்களின் பொருளேயோ ?
    அச்சிரப் பொருளோ அந்த வேதங்களின் முடிவுகளின் பொருளேயோ ?
    மனுவே முதலாம் மனு ஸ்ம்ருதி முதலான
    முறைப்பொருளோ தர்ம சாஸ்திரங்களின் பொருளேயோ ?
    இதிகாச புராண இதிஹாசங்கள் , புராணங்கள் என்னும் இவற்றினுடைய
    முதுப்பொருளோ தேர்ந்த பொருளேயோ ?
    இறைப்பொருளாம் பர தத்துவம் ஆகிய
    நம் பெருமாள் உடை ஸ்ரீ ரங்கா நாதனுடைய
    திரு எட்டெழுத்துள் ஸ்ரீ அஷ்டாக்ஷர மந்திரத்தின்
    உறைப்பொருளோ உட் கருத்து ஆகிய பொருளேயோ ?


    V.Sridhar
    Last edited by sridharv1946; 26-11-13, 14:12.
Working...
X