Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 113/116 திருப் ப&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 113/116 திருப் ப&

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 113/116 திருப் பாற்கடலான் அடியார் அடியார்க்கு இடரிலை


    திருப்பதி - 107/108 வடநாடு - 12/12 : திருப் பாற்கடல்


    தொழும்பு ஆய நான் நல்ல சூது அறிந்து கொண்டேன்
    செழும் பாய் அலை முத்தம் சிந்தி முழங்கும்
    திருப் பாற்கடலான் தாள் சேர்ந்தார் அடி சேர்ந்-
    திருப்பார்க்கு அடல் ஆம் இடர்


    பதவுரை :


    தொழும்பு ஆய நான் எம்பெருமானுக்கு அடியவனான நான்
    நல்ல சூது அறிந்து கொண்டேன் நல்ல உளவை அறிந்து கொண்டேன்
    செழும் பாய் அலை செழித்துப் பாய்கின்ற அலைகளினால்
    முத்தம் சிந்தி முழங்கும் முத்துக்களைகே கொழித்து , முழங்கும்
    திருப் பாற்கடலான் திருப்பாற்கடலில் இருக்கும் திருமாலின்
    தாள் சேர்ந்தார் திருவடிகளை உபாயமாக அடைந்த பக்தர்களது
    அடி சேர்ந்திருப்பார்க்கு திருவடிகளைச் சேர்ந்து இருப்பவர்களுக்கு
    அடல் ஆம் இடர் பிறவித் துன்பங்களை ஒழிப்பது எளிது



    --
    V.Sridhar
Working...
X