4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 112/116 ஆய்ப்பாடியார் அடியார் தொண்டராய்ப் பாடித் தொழும்
திருப்பதி - 106/108 வடநாடு - 11/12 : திரு ஆய்ப்பாடி
கலந்து அமரரோடும் , கரை கண்டாரோடும்
பொலிந்து திருநாட்டு இருக்கப் போவீர் - மலிந்த புகழ்
அண்டர் ஆய்ப்பாடி , அமலர் அடியார் அடியார்
தொண்டராய்ப் பாடித் தொழும்
பதவுரை :
மலிந்த புகழ் நிறைந்த புகழை உடைய
அண்டர் ஆய்ப்பாடி இடையர்கள் வாழ்கின்ற திரு ஆய்ப்பாடியில் இருக்கும்
அமலர் அடியார் அடியார் குற்றமற்ற கண்ணனின் அடியார் அடியார்க்கு
தொண்டராய்ப் பாடித் தொழும் அடிமைப்பட்டவர் ஆகி அவரைப் பாடி வணங்குங்கள் ;
அமரரோடும் அவ்வாறு வணங்கினால் , நித்ய சூரிகளொடும்
கரை கண்டாரோடும் கலந்துஅக்கரை சேர்ந்த முக்தர்களோடும் சேர்ந்து
பொலிந்து திருநாட்டு சிறப்புப் பெற்று ஸ்ரீ வைகுண்டத்தில்
இருக்கப் போவீர் அழிவின்றி இருக்கும்படி செல்வீர்கள் .
--
V.Sridhar