4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 111/116 மா துவரையோனே ! ஐவர் என்னைக் காதுவர் !
திருப்பதி - 105/108 வடநாடு - 10/12 : திருத் துவாரகை
திறம் திறமாத் தாம் துய்க்கும் தீஞ்சுவையை நாடி ,
அறம் திறம்பி , பாதகர் ஓர் ஐவர் - நறுந் துளவ
மா துவரையோனே ! மனம் துணையாக் கொண்டு என்னைக்
காதுவர் ஐயோ மெய் கலந்து
பதவுரை :
நறுந் துளவ நறு மணம் உள்ள திருத் துழாய் மாலை அணிந்த
மா துவரையோனே ! பெருமை பெற்ற துவாரகையில் இருப்பவனே !
பாதகர் ஓர் ஐவர் தீயவர்களான என் ஐந்து பொறிகள்
திறம் திறமாத் விதம் விதமாக
தாம் துய்க்கும் தீஞ்சுவையை நாடி தாம் அனுபவிக்க இனிய சுவைகளைத தேடி
அறம் திறம்பி அற வழியிலிருந்து தவறி
மனம் துணையாக் கொண்டு எனது மனத்தைத் துணையாகக் கொண்டு
மெய் கலந்து என் உடலில் சேர்ந்து
என்னைக் காதுவர் ஐயோ என்னை விடமாட்டார்கள் . ஐயோ !
V.Sridhar