4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 109/116 திருப் பிரிதிக்கு என் நெஞ்சே செல் !
திருப்பதி - 103/108 வடநாடு - 08/12 : திருப் பிரிதி
வழங்கும் உயிர் அனைத்தும் வாரி , வாய்ப் பெய்து
விழுங்கும் கவந்தன் விறல்தோட்-கிழங்கை
பொருப்பு இரு திக்கும் கிடந்தால் போல் , துணித்து வீழ்த்தான்
திருப் பிரிதிக்கு என் நெஞ்சே செல்
பதவுரை :
என் நெஞ்சே எனது மனமே !
வழங்கும் உயிர் அனைத்தும் இயங்கும் எல்லாப் பிராணிகளையும்
வாரி வாய்ப் பெய்து இரு கைகளாலும் திரட்டி வாய்க்குள் தள்ளி
விழுங்கும் கவந்தன் விழுங்கும் கவந்தன் எனும் அசுரனுடைய
விறல்தோள் கிழங்கை வலிமையான தோள்களின் மூல பாகத்தை
பொருப்பு இரு திக்கும் மலை இரு பக்கத்திலும்
கிடந்தால் போல் வீழ்ந்து கிடப்பது போல்
துணித்து வீழ்த்தான் வெட்டித் தள்ளிய இராமனுடைய
திருப் பிரிதிக்கு செல் திருப் பிரிதிக்குச் சென்று சேர்
V.Sridhar