4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 108/116 கண்டத்தாய் ! அடிப் போதின் அமுது அளி !
திருப்பதி - 102/108 வடநாடு - 07/12 : திருக் கங்கைக் கரை கண்டம் (கடி நகர் )
மத்தால் கடல் கடைந்து வானோர்க்கு அமுது அளித்த
அத்தா ! எனக்கு உன் அடிப் போதின் - புத்தமுதை
கங்கைக் கரை சேரும் கண்டத்தாய் ! புண்டரிக
மங்கைக்கு அரசே ! வழங்கு noo
பதவுரை :
மத்தால் கடல் கடைந்து மந்தர மலை எனும் மத்தால் பாற்கடலைக் கடைந்து
வானோர்க்கு அமுது அளித்த அத்தா தேவர்களுக்கு அமிதம் வழங்கிய தலைவா !
கங்கைக் கரை சேரும் கங்கைக்கரையில் உள்ள
கண்டத்தாய் கண்டம் எனும் கடிநகரில் இருப்பவனே !
புண்டரிக மங்கைக்கு அரசே ! தாமரையில் இருக்கும் திருமகள் தலைவனே !
எனக்கு உன் அடிப் போதின் அடியேனுக்கு உன் திருவடி மலரின்
புத்தமுதை வழங்குபுதிய அமுதத்தை கொடுத்து அருள்வாய்
V.Sridhar