Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 106/116 சாளக்கி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 106/116 சாளக்கி

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 106/116 சாளக்கிராமத்தார்க்கு அடிமைப் பேர் பூண்டேன் !

    திருப்பதி - 100/108 வடநாடு - 05/12 : திருச் சாளக்கிராமம் (நேபாளம்)

    உண்டாம் முறைமை உணர்ந்து , அடிமைப் பேர் பூண்டேன்
    பண்டு ஆம் குடி குலத்தால் , பல் மதத்தால் - கொண்டாட்டால்
    ஆள் அக்கிராமத்தால் , அல்லற்பேர் பூணாமல் ,
    சாளக்கிராமத்தார் தாட்கு

    பதவுரை :

    பண்டு ஆம் குடி குலத்தால் தொன்று தொட்டு வருகிற குடியினாலும் , குலத்தினாலும்
    பல் மதத்தால் பல வகை மதத்தினாலும் ,
    கொண்டாட்டால் செய்யும் தொழில் முதலியனவற்றால் ஏற்படும் ஏற்றத்தினாலும் ,
    ஆள் அக்கிராமத்தால் உரிமையோடு வசிக்கும் கிராமத்தினாலும்
    அல்லற்பேர் பூணாமல் துன்பத்திற்கு இடமாகிய பெயரை வைக்காமல்
    சாளக்கிராமத்தார் தாட்கு சாளக்கிராமத்தில் இருக்கும் திருமாலின் திருவடிகளுக்கு
    உண்டாம் முறைமை உணர்ந்து பொருந்திய சம்பந்தத்தை அறிந்து
    அடிமைப் பேர் பூண்டேன் அப்பெருமானுக்கு அடியவன் என்று பெயர் வைத்துக் கொண்டேன்

    V.Sridhar
Working...
X