4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 104/116 சீர்க்கும் திரு ஐயோதிப் புயலை ஓர் !
திருப்பதி - 98/108 வடநாடு - 03/12 :திரு அயோத்தி
ஆர்க்கும் இது நன்று ; தீது ஆனாலும் நெஞ்சே ! நீ
பார்க்கும் பல கலையும் பன்னாதே - சீர்க்கும்
திரு ஐயோதிப் புயலை , சீரிய மெய்ஞ்ஞானத்து
உருவை ஓத்தின் பொருளை ஓர் .
பதவுரை :
நெஞ்சே எனது மனமே !
ஆர்க்கும் இது நன்று நான் சொல்லுவது எல்லோருக்கும் நல்லதே ;
தீது ஆனாலும் அப்படித் தீமையே ஆனாலும்
பார்க்கும் பல கலையும் நீ உலகத்தில் காணும் பல சாத்திரங்களையும்
பன்னாதே கண்டபடி கற்காமல்
சீரிய மெய்ஞ்ஞானத்து உருவை சிறந்த தத்துவ ஞான சொரூபியானவனும் ,
ஓத்தின் பொருளை வேதத்தின் பொருளாய் இருப்பவனும் ஆகிய
சீர்க்கும் திரு ஐயோதிப் புயலை சிறப்புள்ள கரு மேகம் போல் நிறத்தவனுமான ராமனை
ஓர் தியானிப்பாயாக
V.Sridhar