Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 103/116 சிங்க வே&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 103/116 சிங்க வே&

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 103/116 சிங்க வேள் குன்றத்தினாரின் சினமும் கனிவும் !

    திருப்பதி - 97/108 வடநாடு - 02/12 : திருச் சிங்கவேள் குன்றம் (அஹோபிலம்)

    வாழ் குமரன் மேல் , கனக வஞ்சகன் மேல் , ஓர் முகத்தே
    சூழ் கருணையும் முனிவும் , தோன்றினவால் - கேழ் கிளரும்
    அங்க வேள் குன்ற அழல் சபரத்தைப் பிளந்த
    சிங்க வேள் குன்றத்தினார்க்கு

    பதவுரை :

    கேழ் கிளரும்அங்க வேள் நிறம் விளங்குகின்ற மன்மதன்
    குன்ற சாம்பலாய் அழியும்படி ,
    அழல் நெற்றிக் கண்ணைத் திறந்த சிவனுடைய
    சபரத்தைப் பிளந்த அவதாரமான சபரம் எனும் விலங்கைப் பிளந்து அழித்த
    சிங்க வேள் குன்றத்தினார்க்கு அஹோபிலத்தில் இருக்கும் நரசிம்ஹனுக்கு
    ஓர் முகத்தே ஒரு பக்கம்
    வாழ் குமரன் மேல் தன பக்தனான பிரஹலாதன் எனும் சிறுவனிடம்
    சூழ் கருணையும் நிறைந்த பேரருளும்
    கனக வஞ்சகன் மேல் வஞ்சனை கொண்ட ஹிரணியன் மேல்
    ஓர் முகத்தே இன்னொரு பக்கம்
    முனிவும் கடும் கோபமும்
    தோன்றின வால் உண்டாயின

    V.Sridhar
    Last edited by sridharv1946; 23-11-13, 14:37.
Working...
X